Tags: thamarai, herbal chooranam, siddha tonic, men’s health, al angush
Orithal Thamarai Chooranam (ஓரிதழ் தாமரை ) - 500 gms
Traditional siddha formulation known for increasing stamina and male wellness. Supports muscle strength, vitality, and immunity. To be consumed under guidance.
இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும், சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது உடல்நிலை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் கட்டுக்கடங்காத பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரை மூலிகை நல்ல பலன் தரும்.
* ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம்.
* ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்டவர்கள், உடலைத் தேற்ற ஓரிதழ்தாமரை சமூலத்தை உண்பதன்மூலம் நிவாரணம் பெறலாம். இதே சமூலத்தை கஷாயம் செய்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.
*ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் நல்லதொரு மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இதே கஷாயத்தை அருந்தி கைமேல் பலன் பெறலாம்.
* ஓரிதழ்தாமரையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் மேலே சொன்ன பிரச்னைகள் தீரும்.
* உணவு, சூழல், பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.
* பாதுகாப்பற்ற உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று மேகவெட்டை (பாலியல் நோய்). பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம் பலன் தரும்.
* ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோஜனை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பசு நெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை பலனளிக்கும்.
* இலை, தண்டு, வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்குமுன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
இதே சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும். சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும்.