Tags: amla powder, nellikai thool, al angush

Herbal Amla Powder ( நெல்லிக்காய் தூள் ) - 100 gms

₹70.00
100% pure Amla (Gooseberry) Powder to improve hair health, immunity, and digestion. Rich in Vitamin C.நமது பாரத நாடு தட்ப வெப்பம் வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகையான காய்களும், கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவை. நமது நாட்..
  • Ex Tax:₹70.00
  • Brands Alangush
  • Product Code: Herbal Amla Powder ( நெல்லிக்காய் தூள் ) - 100 gms
  • Availability: In Stock

100% pure Amla (Gooseberry) Powder to improve hair health, immunity, and digestion. Rich in Vitamin C.

நமது பாரத நாடு தட்ப வெப்பம் வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகையான காய்களும், கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவை. நமது நாட்டில் அதிகம் விளையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் இருக்கிறது இதனை நெல்லிக்கனி எனவும் அழைக்கின்றனர். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் சிறப்புக்கள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளன.  அப்படிப்பட்ட நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி உண்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காய் நன்மைகள் :

இளமை தோற்றம் :

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.

இதயம் ;

உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கிறது.

சிறுநீரகம் ;

உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றிற்க்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் நெல்லியை அதிகம் உண்ண சிறுநீர் நன்கு பிரியும்.

கண்கள் ;

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ஏ சத்து நமது கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.

எலும்புகள் ;

நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் இருக்கின்றன. எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலிமையடைகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும்.

முடிகொட்டுதல் ;

தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது. முகத்திற்கு அழகையும் கொடுக்கிறது. முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் தலைமுடி வேர்களை வலுப்படுத்தி முடி கொட்டுவதை குறைக்கிறது. மேலும் ஏற்கனவே முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் பணியையும் செய்கிறது. எனவே நெல்லிக்காய்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு முடிகொட்டும் பிரச்சனை குறைகிறது.

மஞ்சள் காமாலை ;

நாம் தினமும் சாப்பிடும் அனைத்து வகையான உணவுகளிலும் ஏதாவது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த பொருளின் கலப்படம் சிறிது உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய நச்சுக்கள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டாலும் அவற்றை நீக்கி உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அந்த கல்லீரலில் ஹெப்பாடிட்டீஸ் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்படும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது. கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனிகளை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.

பித்தப்பை ;

மனித உடலில் மற்ற உறுப்புகளை போலவே பித்தப்பையும் ஒரு முக்கிய உறுப்பாக இருக்கிறது. இந்த பித்தப்பையில் சுரக்கப்படும் பித்த நீர் நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆவதற்கும், அந்த செரிமானம் செய்யப்பட்ட உணவுகளிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்து உடலுக்கு தரும் அரும்பணியையும் பித்த நீர் செய்கிறது. அத்தகைய பித்த பை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். நெல்லிக்கனிகளில் இருக்கும் ரசாயனம் பித்தப்பைகளில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பித்த பை சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

ரத்தம் ;

நமது உடலில் உயிர் இருப்பதற்கு அடிப்படை விடயமாக ரத்தம் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துகள் ஆகியவற்றை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லும் அரும்பணியை ரத்தம் மேற்கொள்கிறது. எனினும் உணவு மற்றும் காற்றில் இருக்கும் நச்சுக்கள் ரத்தத்தில் கலப்பதை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நெல்லிக்கனியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் கழிவு பொருட்கள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி, ரத்தத்தை தூய்மை செய்து உடலில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

வயிற்று புண் ;

நாம் அன்றாட இயங்குவதற்கு சக்தி நாம் உண்ணும் உணவில் இருந்தே கிடைக்கிறது. அப்படி உண்ணும் உணவில் இருந்து முழுமையான சக்தியை பெற நமது வயிறு மற்றும் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் கண்ட, கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. நெல்லிக்காய்களை தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்று புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளும் நீங்கும்.

புற்று நோய் ;

இன்று உலகில் பலரையும் அச்சுறுத்தும் நோயாக புற்று நோய் உருவெடுத்திருக்கிறது. இந்தப் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு ரசாயனம் கலந்த நவீன மருந்துகளை சாப்பிட்டாலும் புற்றுநோயின் பாதிப்பு குறைகிறதே தவிர முழுமையாக யாருக்கும் குணம் கிடைப்பதில்லை. ஆனால் புற்றுநோயை வராமல் தடுக்கவும், புற்று நோய் பாதிப்புகளை நீக்கும் மருத்துவ சக்தி இயற்கையான உணவுகள் கொண்டிருப்பதாக பலர் கருதுகின்றனர். அப்படியான உணவுகளில் ஒன்றாக நெல்லிக்கனி கருதப்படுகிறது. நெல்லிக்கனியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பல ரசாயனங்களும், வேதிப்பொருட்களும் உள்ளன. இந்த நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்கிறது.






















Write a review

Note: HTML is not translated!
    Bad           Good